
மும்பையில் iPhone 17 சீரிஸ் விற்பனை தொடங்கியது: அதிகாலை முதல் குவிந்த ரசிகர்கள்!
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த நிலையில், மும்பை பிகேசி (Bandra Kurla Complex) ஆப்பிள் ஸ்டோர் முன்பு அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய ஐபோனை வாங்குவதில் உள்ள ஆர்வம் காரணமாக, பல மணி நேரம் காத்திருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மாடல்களை வாங்கினர். மும்பையில் மட்டுமல்லாது, டெல்லியிலும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இதேபோன்ற கூட்டம் காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கூட நேரில் சென்று தங்களது போன்களை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். சில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்சங்கள்
புதிய மாடல்கள் மற்றும் அம்சங்கள்
iPhone 17 சீரிஸில், iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 17 Air என நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடல்கள் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டன. iOS 26 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன்கள், மேம்பட்ட கேமரா, செயல்திறன் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்தியாவில் iPhone 17 மாடல்களின் விலை சுமார் ரூ.89,000-ல் இருந்து தொடங்குகிறது.