ட்விட்டர் அப்டேட்: விரைவில் நீண்ட பதிவுகளை இடும் வசதி அறிமுகம்
எலன் மஸ்க், ட்விட்டரில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறார். வாரம் ஒரு அப்டேட் வீதம், ட்விட்டர் மறுவடிவம் பெற்று வருகிறது.ப்ளூ டிக் அறிமுகத்தில் ஆரம்பித்த இந்த அப்டேட் பட்டியல், தற்போது நீள் பதிவு வசதி வரை நீண்டுள்ளது. இது பற்றி பதிவிட்டுள்ள எலன் மஸ்க், விரைவில் பயனர்களை நீண்ட வடிவ ட்வீட்களை பதிவிட, ட்விட்டர் அனுமதிக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புதுப்பிப்பு அடுத்த இரண்டு மாதங்களில் வெளி வரும் எனவும் எதிர்பார்க்கலாம் என மஸ்க் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீள் பதிவுகள் இடும் வசதி அறிமுகம்
ட்விட்டரில் பல மாற்றங்கள் அறிமுகம்
இதே போல், இம்மாத தொடக்கத்தில், ட்விட்டரின் UI -இல் சிறிய மாற்றத்தை உள்ளடக்கி, ஸ்வைப் மூலம் இயக்கும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது அந்நிறுவனம். அதோடு டிவீட்களின் அதிகபட்ச வரம்பாக இருந்த 140 எழுத்துகளில் இருந்து, 240 எழுத்துகள் வரை உயர்த்தப்பட்டது. மேலும் பல மாறுதல்கள் எதிர்காலத்தில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.