ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்று பதவியேற்கிறார் லிண்டா யாக்கரினோ!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார் எலான் மஸ்க்.
இந்த கைப்பற்றலைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தைப் பெருக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் எலான் மஸ்க்.
முதலில் அப்போதைய ட்விட்டர் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும், எலான் மஸ்க் வருகைக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சில வாரங்களுக்கு முன்பு வரை எலான் மஸ்க்கே அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வந்த நிலையில், லிண்டா யாக்கரினோ என்பவரை புதிய சிஇஓ-வாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார் எலான் மஸ்க்.
லிண்டா யாக்கரினோ இன்று ட்விட்டரின் அடுத்த சிஇஓ-வாக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார்.
ட்விட்டர்
புதிய ட்விட்டர் சிஇஓ:
முன்னதாக NBC யுனிவர்சல் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டமைப்புப் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்திருக்கிறார் லிண்டா யாக்கரினோ.
ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக தான் பதவியேற்ற பிறகு NBC யுனிவர்சலின் நிர்வாக துணைத் தலைவராக இருந்த ஜோ பெனாரோச் என்பவரையும் ட்விட்டரில் புதிதாக பணியமர்த்தியிருக்கிறார் லிண்டா.
ட்விட்டரின் வணிக செயல்பாடுகளில் தான் கவனம் செலுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் பெனாரோச். NBC யுனிவர்சலில் பணிபுரிந்த போதிருந்தே பெனாரோச் தன்னுடைய நம்பிக்கையான நபர்களுள் ஒருவராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் லிண்டா.
புதிய சிஇஓ-வாக லிண்டா பொறுப்பேற்பதைத் தொடர்ந்து, இனி டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தனது முழு கவனத்தையும் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.