Page Loader
இந்தியாவின் முதல் 13வது ஜெனரேஷன் லெனோவா Yoga 9i லேப்டாப் அறிமுகம்!
லெனோவா Yoga 9i லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவின் முதல் 13வது ஜெனரேஷன் லெனோவா Yoga 9i லேப்டாப் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Jan 18, 2023
11:18 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில், லெனோவா நிறுவனம் அதன் புதிய இன்டெல் 13வது ஜெனரேஷன் i7 யோகா 9ஐ லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பில், லெனோவா புதிய 4k OLED டிஸ்பிளே கொண்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் 4 விதங்களில் உபயோகிக்கலாம். இது, Intel Evo Platform கிராபிக்ஸ் வசதி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது 2 in 1 லேப்டாப் என்றாலும் அதிகப்படியான வசதிகள் கொண்ட பிரீமியம் லேப்டாப்பாக உள்ளது. முக்கியமாக இதில் intel நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான 13வது ஜெனரேஷன் i7 Processor இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக 13வது ஜெனரேஷன் லேப்டாப் இது என்ற பெருமையுடன் இந்த லேப்டாப் அறிமுகமாகியுள்ளது.

லெனோவா Yoga 9i

லெனோவா Yoga 9i லேப்டாப்பின் விலை மற்றும் முக்கிய அம்சம் என்ன?

புதிய Iris XE Graphics வசதி உள்ளது. 2MP FHD+IR ஹைபிரிட் கேமரா வசதி உள்ளது. மேலும், 75WH பேட்டரி வசதி கொண்டதால், தொடர்ச்சியாக 10 மணிநேரம் இதனை பயன்படுத்தலாம். இதன் எடை 1.4 கிலோ ஆகும். அடுத்து, Gen 2 Headphone jack வசதி, 4 ஸ்பீக்கர் மற்றும் Dolby Atmos Support, Glass TouchPad, WiFi 6E, ப்ளூடூத் 5.2, 5.0GHZ P Core, 3.7GHZ E Core வசதியை கொண்டுள்ளது. இந்த சிறப்பு அம்சங்கள் கொண்ட லேப்டாப்பின் விலை 1,74,990 லட்சம் ரூபாய் ஆகும். இந்த லேப்டாப், Croma, Reliance Stores மற்றும் Amazon ஷாப்பிங் தளங்களில் ஜனவரி 29 முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.