ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போட்டியாக களமிறங்கும் இந்திய அரசின் IndOS;
ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் கூகுளின் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக இந்திய அரசு 'IndOs' என்ற மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி இந்திய மூத்த அரசு அதிகாரி ஒருவர், "உலகின் மிகப்பெரிய மொபைல் சாதன சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. எங்களின் நோக்கமே இந்தியாவில் மொபைல் பாதுகாப்பு இயங்குதளத்தை உருவாக்குவதே. இந்திய சந்தையில், ஆண்ட்ராய்டின் ஆதிக்கத்திற்கான தேர்வுகள் மற்றும் போட்டியை உருவாக்குவது ஐஓஎஸ்-இன் சிறிய பங்கு வகிக்கிறது" என கூறியுள்ளார். மேலும், பிசினஸ் ஸ்டாண்டர்ட் வெளியிட்ட அறிக்கையில், IndOS ஐ உருவாக்குவதற்கான செயல்பாடுகளில், Google மற்றும் Apple நிறுவனங்களுக்கு ஆரோக்கியமான போட்டியை வழங்குவதுடன், கூடுதல் தேர்வுகளையும் வழங்கும் என தெரிவித்துள்ளது.
இந்திய அரசு உருவாக்கும் IndOS எப்படி இருக்கும்?
தற்போது, கூகுளின் ஆண்ட்ராய்டு 97 சதவீதம் பங்கை பெற்று உள்ளது. அதுவே ஆப்பிளின் ஐஓஎஸ் ஒரு சிறிய பங்கையே கொண்டுள்ளது. எனவே அரசின் IndOS-ற்கு கூடுதல் பாதுகாப்பை கூகுள் அல்லது OEM கள் பொறுப்பேற்க வேண்டும். இருந்தாலும், ஆண்ட்ராய்டு ஃபோன் தயாரிப்பாளர்கள் பயனாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க மறுத்துள்ளதாக சாதனத் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மொபைல் சந்தையை ஆண்ட்ராய்டு டாமினேட் செய்து வரும் நிலையில், உள்நாட்டு தயாரிப்பு பற்றிய செய்தி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த OS எப்போது அறிமுகமாகும், பயனர்களுக்கு எவ்வாறு வெளியிடப்படும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இப்போது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.