பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி
உலகளவில் டெக் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணி நீக்கத்தை செய்து வந்தது. அதில், அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 3ல் ஒரு பங்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான். அங்கு பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் 90 நாட்களில் புதிய வேலையை தேடிக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இதில் இருந்து தப்பிக்க புதிய வேலை கிடைக்கவில்லை என பலர் புதிய நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து அமெரிக்காவில் குடியுரிமை பெற துவங்கினர். ஆனால், இந்த விஷயமே விஸ்வரூபம் எடுத்து அந்த நிறுவனங்களுக்கே தலைவலியாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சொந்த தொழில் - புலம்பும் நிறுவனங்கள்
அதாவது, சுமார் 63 சதவீதம் பேர் பணிநீக்கத்திற்கு பின்பு புதிய தொழிலை துவங்கி தொழில்முனைவோர் ஆக உருவெடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி, இதில் 93 பேர் தாங்கள் வெளியேறிய நிறுவனத்துடனே போட்டிப்போடும் வகையில் வர்த்தகத்தை துவங்கியுள்ளனர். சொந்தமாக தொழில் துவங்கியவர்களின் வருடாந்திர வருமானம் முன்பை விடவும் 13000 டாலர் சராசரியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் job security-ஐ உணர்கிறார்கள். காரணம் என்ன? பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் 6 மாதத்திலேயே தொழில் துவங்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர். இவர்கள் சொந்தமாக சாதிக்கவேண்டும் இனியும் பணிநீக்க நிறுவனத்தில் சேர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.