
லாவாவின் புதிய 'லாவா யுவா 2 ப்ரோ'.. பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
தொடக்க நிலை ஸ்மார்ட்போன் செக்மண்டில் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது இந்திய மொபைல் நிறுவனமான லாவா. முதன்முறை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக 'லாவா யுவா 2 ப்ரோ' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.
வசதிகள்:
6.5 இன்ச் LCD டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G37 ப்ராசஸர்
13MP ரியர் கேமரா: 5MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
10W சார்ஜிங் வசதி
பக்கவாட்டு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்கள்
ஆண்ட்ராய்டு 12
விலை: 4 GB ரேம் + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.7,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
ப்யூச்சர் போனில் இருந்து முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்காக இந்த புதிய யுவா 2 ப்ரோவை வெளியிட்டிருக்கிறது. மேலும், யுவா ப்ரோவின் அப்டேட்டட் வெர்ஷனாகவும் இதனை வெளியிட்டிருக்கிறது லாவா.
அடிப்படையான ப்ராசஸர் தான், தினசரி நடவடிக்கைகளுக்கு ஓகேவான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது இந்த யுவா 2 ப்ரோ.
கேமரா பெர்ஃபாமன்ஸும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இல்லை.
பேட்டரி லைஃப் சிறப்பாக இருக்கிறது. சாதாரண பயன்பாட்டிற்கு இரண்டு நாள் வரை கூட தாக்குப்பிடிக்கிறது.
இதன் டிசைன் ப்ரீமியமாக இருக்கிறது. பார்ப்பதற்கு மிட்ரேஞ்ச் செக்மண்ட் போன் போலான தோற்றத்தைக் கொடுக்கிறது இதன் டிசைன்.
தொடக்கநிலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், மோட்டோ E13 இதே விலையும் இன்னும் சிறப்பான பெர்ஃபாமன்ஸூடன் இருக்கிறது. அதனையும் கருத்தில் கொள்ளலாம்.