Loading...
மீண்டும் களமிறங்கும் இந்திய பிராண்ட்; குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்; கார்பன் ரீ-என்ட்ரி அறிவிப்பு
குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையைத் தொடங்குகிறது இந்திய பிராண்ட் கார்பன்

மீண்டும் களமிறங்கும் இந்திய பிராண்ட்; குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்; கார்பன் ரீ-என்ட்ரி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 29, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பிரபல உள்நாட்டு மொபைல் உற்பத்தி நிறுவனமான கார்பன் (Karbonn), இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சந்தையில் இருந்து விலகியிருந்த இந்த நிறுவனம், தற்பொழுது ஜென் ஜி தலைமுறையினர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஜைனா குரூப் தலைமை நிர்வாகி பிரதீப் ஜெயின் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வாடிக்கையாளர்கள்

விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை இலக்கு வைக்கும் கார்பன்

சமீபகாலமாக நினைவகக் கூறுகளின் விலை உயர்வால், சியோமி, ஒன்பிளஸ், விவோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன.

இதனால் பட்ஜெட் விலையில் போன்களை வாங்க நினைக்கும் சாமானிய மக்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், மலிவு விலையில் அதிநவீன அம்சங்கள் கொண்ட போன்களைத் தரமான தொழில்நுட்பத்துடன் வழங்கக் கார்பன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மொபைல் டீசர்

அமேசான் மைக்ரோசைட்டில் வெளியான கார்பன் 'Rebel 5G' டீசர்

புதிய போன்களின் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான அமேசானில் 'Karbonn Rebel 5G' என்ற புதிய ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் பக்கம் உருவாக்கப்பட்டு டீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 'Karbonn ZenZ Pro 4G' என்ற மாடலும் மீடியா டெக் பிராசஸருடன் சோதிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு

இந்திய உள்நாட்டு மொபைல் தயாரிப்பிற்கு முக்கியத்துவம்

மத்திய அரசின் மொபைல் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்நாட்டு போன் தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன.

மிவி, ஃபயர்-போல்ட் போன்ற இந்திய நிறுவனங்களைத் தொடர்ந்து கார்பனும் ₹20,000-க்கும் குறைவான பட்ஜெட் பிரிவில் களம் காணவுள்ளது.

2028-க்குள் முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட போன்களை உருவாக்கும் மத்திய அரசின் இலக்கிற்கு, கார்பனின் இந்த ரீ-என்ட்ரி பெரிய ஊக்கமாக அமையும்.

ADVERTISEMENT