கான்பூர் முதல் சென்னை வரை: இந்திய மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் படங்களை உருவாக்கிய AI
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முதல் கற்பனை, செயற்கை மற்றும் துல்லியமான படங்களை உருவாக்குவது வரை, AI எல்லா இடங்களிலும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது. இப்போது, 'சாஹித்' என்ற கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் 'மெட்ரோ' ரயில் படங்களை AI உதவியுடன் உருவாக்கியுள்ளார். அதில் கான்பூர், சூரத், ஹரியானா, சென்னை, சத்தீஸ்கர் போன்ற இடங்களின் மெட்ரோ ரயில்கள் எப்படி இருக்குமென செயற்கை நுண்ணறிவு செயலி, படம்பிடித்து காட்டுகிறது. ஹரியானாவில், ஹரியான்வி கலாச்சாரத்தை சித்தரிக்கும் வகையில், தங்கள் வழக்கமான உடையில், குச்சிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சென்னையில், நடிகர் ரஜினிகாந்த் மெட்ரோ உள்ளே அமர்ந்திருப்பதைக் காணலாம். இது போன்று மற்ற இடங்களின் படங்களும் ஒவ்வொரு சிறப்பான விஷயங்களை தெரிவிக்கிறது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட மெட்ரோ நகரங்களின் மெட்ரோ ரயில்கள்
AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் மெட்ரோ ரயில் படங்களும் காண முடிந்தது. கொல்கத்தாவின் மெட்ரோ படத்தில் ஒரு மீன் வியாபாரியை காண முடிந்தது, கடல் உணவுகள் மீதான நகரத்தின் அன்பை இது காட்டுகிறது. குஜராத் மெட்ரோ படத்தில் கவர்ச்சிகரமான டோக்லாஸ் காட்சிப்படுத்தப்பட்டது, இது மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டியாகும். மும்பையின் மெட்ரோ படத்தில், பேமஸ் சாட் உணவான வடா பாவை காணமுடிந்தது. அதேபோல, ஹைதராபாத், பெங்களூரு, நாக்பூர், ஒடிசா, காஷ்மீர், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மெட்ரோ படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதில், நாக்பூரின் புகழ்பெற்ற ஆரஞ்சுகள் இடம் பெற்றிருந்தன, பீகாரின் பாரம்பரிய உணவான லிட்டிகளை வைத்திருக்கும் ஒரு விற்பனையாளரின் படங்கள் போன்றவை காணப்பட்டன.