Loading...
இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள் திட்டம் வெற்றி; இதனால் என்ன பயன்?
NVS-03 வழிகாட்டுதல் செயற்கைக்கோளின் இறுதி நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது ISRO

இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள் திட்டம் வெற்றி; இதனால் என்ன பயன்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
05:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) கடந்த அக்டோபர் 30 அன்று 'GSLV-F18' ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய NVS-03 வழிகாட்டுதல் செயற்கைக்கோளின் 3-வது மற்றும் இறுதி சுற்றுப்பாதை உயர்த்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் செயற்கைக்கோள் தனது இலக்கான 35,842.6 x 34,594.9 கி.மீ புவிநிலை சுற்றுப்பாதையில் (Geosynchronous Orbit) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்பான NavIC-இன் சேவையை முழுமையாக மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் இச்சாதனை மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

NavIC மற்றும் NVS-03 செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்கள்

NVS-03 செயற்கைக்கோளில் துல்லியமான நேரத்தை கணக்கிட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு அணு கடிகாரம் மற்றும் கூடுதல் கடிகார அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கமான L5 மற்றும் S அலைவரிசைகளுடன் சேர்த்து இதில் 'L1 அலைவரிசை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஸ்மார்ட்போன்கள், வழிசெலுத்தல் கருவிகள் மற்றும் கார்ப்பரேட் சிப்களில் NavIC சிக்னல்களை எளிதாகப் பெற உதவும்.

இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்தியாவின் எல்லைகளிலிருந்து சுமார் 1,500 கி.மீ தூரம் வரையிலான பகுதிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் வழிசெலுத்தல் சேவைகளை இது வழங்கும்.

NVS-03 செயற்கைக்கோள் சுமார் 12 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்

NVS-03 ஏன் இந்தியாவுக்கு மிக முக்கியமானது?

அமெரிக்காவின் GPS சேவைக்கு மாற்றாக இந்தியா உருவாக்கி வரும் NavIC அமைப்பில், சில முந்தைய செயற்கைக்கோள்களின் அணு கடிகார கோளாறுகள் மற்றும் NVS-02 தோல்வி காரணமாகச் செயல்பாட்டு செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

சுயசார்பான வழிகாட்டுதல் சேவை வழங்க குறைந்தபட்சம் 4 செயற்கைக்கோள்கள் தேவை என்ற நிலையில், இந்த NVS-03 செயற்கைக்கோள் அந்த எண்ணிக்கையை நிறைவு செய்து NavIC சேவையை முழுமையடையச் செய்துள்ளது.

ADVERTISEMENT

மாற்றங்கள்

அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

இஸ்ரோவின் சோதனை மற்றும் அமைப்புகளின் தணிக்கைகளுக்குப் பிறகு, இச்செயற்கைக்கோள் முழுப் பயன்பாட்டிற்கு வரும்.

கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளுக்கு பதிலாக NavIC மூலம் மிகவும் துல்லியமான இருப்பிடத் தகவல்களைப் பெறலாம்.

சாலைப் போக்குவரத்து, ரயில்வே மற்றும் கடல்சார் கப்பல் போக்குவரத்தை துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.

பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்புப் பணிகளுக்கு உடனுக்குடன் உதவிகள் பெற முடியும்.

வெளிநாட்டுச் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் ராணுவப் பாதுகாப்பிற்கு தேவையான வழிசெலுத்தல் தரவுகளைத் தடையின்றி பெற முடியும்.

ADVERTISEMENT