Page Loader
XPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?
XPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?

XPoSat செயற்கைக்கோளுடன் இஸ்ரோவால் விண்வெளிக்கு அணுப்பப்பட்ட FCPS ஆற்றல் மூலம், என்ன அது?

எழுதியவர் Prasanna Venkatesh
Jan 01, 2024
01:07 pm

செய்தி முன்னோட்டம்

2024ம் ஆண்டின் முதல் நாளான இன்றே, காலை 9.10 மணிக்கு XPoSat என்ற விண்வெளி கதிர்வீச்சு ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த ஏவலின் போதே, மற்றொரு திட்டத்தினையும் சோதனை செய்திருக்கிறது இஸ்ரோ. Fuel Cell Power System (FCPS) எனப்படும் விண்வெளி திட்டங்களுக்கான ஆற்றல் மூலத்தையும் இந்த XPoSat செயற்கைக்கோளுடன், PSLV ராக்கெட்டின் நான்காம் நிலையான PSLV Orbital Experimental Module (POEM) உடன் அனுப்பியிருக்கிறது இஸ்ரோ. XPoSat செயற்கைக்கோளுடன் முதலில் 650 கிமீ உயர சுற்றுவட்டப்பாதையில் நுழைக்கப்பட்டு, பின்னர் 350 கிமீ உயர சுற்றுவட்டப்பாதைக்கு கீழிறக்கப்பட்டிருக்கிறது இந்த FCPS.

இஸ்ரோ

எதற்கான இந்த FCPS சோதனை? 

தற்போது விண்வெளியில் சர்வதசே விண்வெளி நிலையம் மற்றும் சீனாவின் விண்வெளி நிலையம் ஆகிய இரண்டு விண்வெளி நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன. அந்த விண்வெளி நிலையங்களை எதையும் இந்தியா பயன்படுத்தும் நிலையில் இல்லை. எனவே, இந்தியாவிற்கென தனிப்பட்ட விண்வெளி நிலையம் ஒன்றை வரும் ஆண்டுகளில் அமைக்கும் திட்டம் இஸ்ரோவிடம் உள்ளது. அப்படி தனியே விண்வெளி நிலையம் அமைக்கும் பட்சத்தில், அதற்கு சிறந்த நீண்டு உழைக்கிற ஆற்றல் மூலம் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த FCPS ஆற்றல் மூலத்தை உருவாக்கி, தற்போது சோதனைக்காக அனுப்பியிருக்கிறது இஸ்ரோ.