IRCTC செயலி, தளம் முடக்கம்; டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி
இந்திய ரயில்வேஸின் அதிகாரபூர்வ இணையதளமான IRCTC இன்று காலை திடீரென முடங்கியது. இதன் செயலியும் செயலலிழப்பை சந்தித்தது. இதன் காரணமாக பயணிகள் பதிவு செய்த டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யமுடியவில்லை எனவும், ஒரு சிலர் திரையில் காணமுடியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். ஒரு சில தரப்பினருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தனர். downdetector.com என்ற கண்காணிப்பு இணையணைத்தளத்தின் படி, IRCTC இணையதளத்தின் சமீபத்திய புதிப்பிற்கு பின்னரே இந்த சிக்கல் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCTC செயலி, தளம் முடங்கியது
காலை தட்கல் சேவையின் போது முடங்கிய சேவை
இன்று காலை 10 மணியளவில் தட்கல் சேவைகள் துவங்கும் போது முன்பதிவு சேவைகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்ததாக பயனர்கள் X தளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது 11 அளவில் உச்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இன்று IRCTC நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. IRCTC-யின் நிகர லாபத்தில் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என News18 மேற்கோள்காட்டியுள்ளது. Q1 முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில், நிறுவனத்தின் 25வது ஆண்டு பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 30 நடைபெறுகிறது.