எப்படி இருக்கிறது iQoo Z7 5G: ரிவ்யூ!
இந்தியாவில் விற்பனையாகி வந்த Z6 5G-யை தொடர்ந்து Z7 5G ஸ்மார்ட்போன் கடந்த மாதம் வெளியிட்டது ஐகூ (iQoo) நிறுவனம். வசதிகள்: 6.38 இன்ச் AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டைமன்சிட்டி 920 ப்ராசஸர் 64 MP + 2 MP ரியர் கேமரா: 16 MP செல்ஃபி கேமரா 4,500 mAh பேட்டரி 44W ஃப்ளாஷ்சார்ஜ் வசதி இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ஆண்ட்ராய்டு 13 விலை: 6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.18,999 8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.19,999
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
Z6 5G மொபைலின் அப்டேட்டட் வெர்ஷனைப் போல இந்த Z7 5G மொபைலை வெளியிட்டிருக்கிறது ஐகூ. விலையில் இருந்து பெர்ஃபாமன்ஸ் வரை Z6-ஐ விட கொஞ்சம் சிறப்பாகவே இருக்கிறது இந்த Z7. தொடர்ந்து சில மணி நேரங்கள் மொபைலில் கேம் விளையாடினாலும், சூடாகாமலும் லேகாகாமலும் தாக்குப்பிடிக்கிறது. பேட்டரியைப் பொருத்தவரை மிகச்சிறப்பாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரண பயன்பாட்டிற்கு ஒரு நாளுக்கு மேலேயே நீடிக்கிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ஒரு மணி நேரத்திற்கும் கொஞ்சம் அதிகமான நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிறது. இரண்டு கேமராக்களுமே இந்த செக்மண்டுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே இருக்கின்றன. பின்னடைவு என்றால் ஸ்பீக்கர் தான். ஒரு ஸ்பீக்கர் தான், அதிலும் சொல்லிக்கொள்ளும் அளவு செயல்பாடுகள் இல்லை.