
கேம் விளையாடுவதற்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம்.. ஐகூ நிறுவனம் அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
மொபைலில் கேம்ஸ் விளையாடுவது என்பது வெறும் பொழுதுபோக்கு என்பது இந்திய பெற்றோர்களின் மனநிலை. ஆனால், அதனையே பொழுதுபோக்காகக் கொண்டவர்களுக்கு புதிய வாய்ப்பை வழங்கவிருக்கிறது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ (iQoo).
உலகளவில் மொபைல் கேமிங் என்பது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு விஷயமாக மாறியிருக்கிறது.
தரமான ஷூட்டிங் கேம்களை உயர்ரக கணினி மற்றும் கேம் கன்சோல்களில் மட்டுமே விளையாட முடியும் என்ற நிலை மாறி, ஸ்மார்ட்போன்களிலும் நல்ல சிஜிஐ கொண்ட பப்ஜி, கால் ஆஃப் ட்யூட்டி உள்ளிட்ட கேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தற்போது புதிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் போது கேமிங் பெர்ஃபாமன்ஸூக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
ஐகூ
ஐகூ-வின் திட்டம் என்ன?
ஸ்மார்ட்போன் கேமிங் இந்தியாவிலும் வளர்ந்து வரும் நிலையில் தான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஐகூ.
தங்கள் நிறுனத்தில் தலைமை விளையாட்டு அதிகாரி (Chief Gaming Officer) ஒருவரை நியமிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஐகூ.
அந்நிறுவன டெவலப்பர்களுடனும், இந்திய கேமிங் கம்யூனிட்டியுடனும் இந்த புதிய அதிகாரி இணைந்து பணியாற்ற வேண்டும். ஸ்மார்ட்போன் கேமிங்கை மேம்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை அவர் செய்ய வேண்டும்.
இதற்கு 6 மாத காலத்திற்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது ஐகூ. 18 முதல் 25 வயது வரையுள்ள, கேமிங்கின் மீது தீராக் காதல் கொண்டவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விருப்பமுள்ளவர்கள் அந்நிறுவனத்தின் இணையப்பக்கத்திற்குச் சென்று தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடியுடன் விண்ணப்பிக்கலாம்.