Page Loader
இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்;
இளைஞர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்

இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்;

எழுதியவர் Siranjeevi
Jan 21, 2023
04:18 pm

செய்தி முன்னோட்டம்

இளைஞர்களின் நலனுக்காக இன்ஸ்டாகிராம் 'Quiet Mode' என்றொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளில் பேஸ்புக் நிறுவனமான மெட்டா அதனை கையப்படுத்தியது. இன்று உலகளவில் சுமார் 1 பில்லியன் பேர் மாதம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். ட்விட்டருக்கு இணையாக இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய இளைஞர்களின் நலனுக்காக இந்நிறுவனம் 'Quiet Mode' என்றொரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இப்போதைக்கு இந்த அம்சமானது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்

இளைஞர்களின் நலனுக்காக இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம் - எங்கு பயன்படுத்தலாம்?

மேலும், இளம் வயது இளைஞர்கள் இரவு நேரங்கள் அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தவிர்க்கவும், படிப்பில் கவனம் செலுத்த அவர்களுக்கு இதில் சிறிய ஓய்வு அளிக்கவும், இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஆன் செய்யப்பட்ட நேரத்தில் பயனர்கள் பெறுகின்ற நோட்டிபிகேஷன் அனைத்தும் சைலண்ட் மோடில் இருக்கும் என தெரிகிறது. எனவே, அந்த சமயங்களில் நீண்ட நேரம் அவர்கள் பயன்படுத்தினால் அதுகுறித்த அலர்ட் கொடுக்குமாம். இந்த அம்சத்தை அஃப் செய்த பிறகு பயனர்கள் மிஸ் செய்த அனைத்தையும் பார்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கும் இந்த அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.