Loading...
இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: டேக் செய்யப்பட்ட போட்டோக்களை மெயின் ப்ரொஃபைல் கிரிடில் சேர்க்கலாம்
ப்ரொஃபைல் பக்கங்களை இன்னும் சிறப்பாக வடிவமைக்கும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது Instagram

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: டேக் செய்யப்பட்ட போட்டோக்களை மெயின் ப்ரொஃபைல் கிரிடில் சேர்க்கலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
03:01 pm

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் தளம், பயனர்கள் தங்களது ப்ரொஃபைல் பக்கங்களை இன்னும் சிறப்பாக வடிவமைக்கும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிறர் உங்களை டேக் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக உங்களது முதன்மை ப்ரொஃபைல் கிரிடில் சேர்த்துக் கொள்ள முடியும். இத்தகவலை இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசேரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பயன்

இந்த அம்சத்தின் பயன் என்ன?

இதுவரை பிறர் நம்மை டேக் செய்யும் புகைப்படங்கள் ப்ரொஃபைலில் உள்ள 'Tagged Tab' என்ற தனிப்பிரிவில் மட்டுமே தோன்றும்.

ஆனால் இனி, நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள், கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் கிரியேட்டர் கூட்டாண்மை பதிவுகளை நாமாக பதிவிடாமலேயே நமது முதன்மைப் பக்கத்தில் காண்பிக்க முடியும்.

வழிமுறை

டேக் செய்த போஸ்ட்டை ப்ரொஃபைல் கிரிடில் சேர்ப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் இதற்காக 3 எளிமையான வழிகளை வழங்கியுள்ளது:

1. ஒருவர் உங்களை டேக் செய்யும்போது வரும் நேரடிச் செய்தி வழியே சேர்க்கலாம்.

2. டேக் செய்யப்பட்ட போஸ்ட்டின் வலது மேல் மூலையில் உள்ள 'Three Dots' ஐக் கிளிக் செய்து சேர்க்கலாம்.

3.உங்களது 'Tagged Tab' பகுதிக்குச் சென்று, அந்தப் போஸ்ட்டை அழுத்திப் பிடிப்பதன் மூலம் முதன்மைப் பக்கத்திற்கு மாற்றலாம்.

ADVERTISEMENT

அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்:

கிரிடில் சேர்க்கப்படும் போஸ்ட்கள் அது பதிவிடப்பட்ட தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.

இந்த போஸ்ட்டை உங்கள் ப்ரொஃபைல் கிரிடில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

அப்படி நீக்கினாலும், அது அசல் பதிவையோ அல்லது உங்களது டேக்கையோ பாதிக்காது.

இந்த புதிய வசதி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT