
எப்படி இருக்கிறது 'இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G' ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், பட்ஜெட் மொபைலில் 5G வசதி தான் அரிதாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க 5G வசதியுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நோட் 30 5G-யை வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ். இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
6.78 இன்ச் LCD டிஸ்பிளே
மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ப்ராசஸர்
108MP+2MP+AI ரியர் கேமரா: 16MP செல்ஃபி கேமரா
5000 mAh பேட்டரி
45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
5G வசதி
ஆண்ட்ராய்டு 13
விலை:
4 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.14,999
8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.15,999
மொபைல் ரிவ்யூ
இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
மீடியாடெக் டைமன்சிட்டி 6080 என்பது ஒரு நல்ல பட்ஜெட் ப்ராசஸர் தான். ஆனால், இன்ஃபினிக்ஸின் XOS 13 சாஃப்ட்வேர் அவ்வளவு நீட்டாக இல்லை. ஓகே வான சாஃப்ட்வேர் தான்.
இதைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற அனைத்து அம்சங்களையும் விலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவே கொடுத்திருக்கிறது இன்ஃபினிக்ஸ்.
கேமரா பெர்ஃபாமன்ஸ் ஓகே வாக இருக்கிறது. ஒரு பட்ஜெட் போனுக்கு ஏற்ற கேமராவிற்கான வேலையைச் செய்கிறது இதன் கேமரா.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 5,000mAh பேட்டரி 53 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடுகிறது. கூடவே ஒரு சார்ஜரும் கொடுத்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் பரிந்துரைக்கு ஏற்ற ஒரு டீசன்ட்டான 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்த இன்ஃபினிக்ஸ் நோட் 30 5G.