இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு!
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. வசூலிக்கப்பட்ட வரி ரூ .13.73 லட்சம் கோடியை எட்டி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. வசூலான தொகை என்பது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட பட்ஜெட்டின் 96.67 சதவிகிதம் ஆகும். ஏற்கனவே இந்த முழு நிதியாண்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட இலக்கில், இது 83 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது என்பதை வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர வசூலை விட 16.78 சதவீதம் அதிகமாகும். வசூல் மட்டுமில்லாமல், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை, இதற்கு முந்தைய ஆண்டுக்கான் திருப்பிச்செலுத்த வேண்டியதில், ரூ.2.95 லட்சம் கோடி வரி ரீஃபண்டு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.