Page Loader
ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!
அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று கடனை அடைக்கும் அதானி குழுமம்

ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!

எழுதியவர் Siranjeevi
Mar 11, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம் தற்போது கடன்களை திரும்ப அடைத்து மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது. இதனிடையே, கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன. தொடர்ந்து, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை போக்க முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது.

அதானி குழுமம்

கடனை அடைக்க, சொந்த நிறுவனத்தின் பங்குகளை விற்கும் நிலைமை

அதற்கான நிதியை திரட்டவே அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டி ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும் ரூ.7,374 கோடி மதிப்பிலான கடன் நிலுவைகளை அதானி நிறுவனம் முன்கூட்டியே திரும்ப செலுத்தியிருந்தது. கடந்த ஆண்டு ரூ.80 ஆயிரம் கோடிக்கு அதானி கையகப்படுத்திய அம்புஜா சிமெண்டில், அவருக்கு 63 சதவீத பங்குகள் உண்டு. அதில் 5 சதவீதப் பங்குகளை விற்று சுமார் ரூ.3,700 கோடி திரட்ட அதானி திட்டமிட்டுள்ளார்.