
விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் வெகுவிரைவில் உள்ளது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதிகளும், சிறப்புகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசியாபாத்தில் உள்ள சாஹிதாபாத் தொடங்கி துஹாய் டெபோ-வை இணைக்கும் வகையில் இந்தியாவின் முதல் விரைவு ரயில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த விரைவு இரயில் ஆனது, 2023 மார்ச் மாதம் முதல் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.
மணிக்கு சுமார் 180 கிமீ வேகத்தில் விரைவு ரயில், 17 கிமீ தூரம் இடைவெளிக் கொண்டதே சாஹிதாபாத் - துஹாய் டெபோ வழித்தடத்தில் செல்கிறது.
இந்த ரயில் பயணத்தில் செல்ல டிக்கெட்டை செல்போன் வாயிலாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரேபிட் இரயில்
விமானத்தை மிஞ்சும் இந்தியாவின் முதல் ரேபிட் இரயில் அறிமுகம்
அதன்படி, சொகுசு இருக்கைகள், பிரீமியம் இன்டீரியர், ஃபுல் ஏசி வசதி, ஆட்டோமேட்டிக் டூர் கன்ட்ரோல் சிஸ்டம், லக்கேஜிற்கு தனி ஸ்டோரேஜ், டிரைவர் இன்டராக்சன் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுமட்டுமின்றி, டைனமிக் ரூட் மேப், சிசிடிவி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒய்-ஃபை, செல்போனுக்கான யுஎஸ்பி சார்ஜர், பயணத்தின்போது வெளிப்புறத்தைக் கண்டுகளிக்கும் விதமாக பெரிய விண்டோ போன்ற மனம் கவரும் அம்சங்கள் உள்ளன.
நோயாளிகளுக்கு தனி அறை
இந்த ரயிலில் எந்தவொரு ரயிலிலும் இல்லாத வகையில் ஸ்டிரெச்சர் வசதி ரயிலின் கடைசி பெட்டியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
உடல்நிலை சரியில்லாதவர்கள் பாதுகாப்பாக இடம் பெயர இந்த வசதி மிகுந்த உதவியாக இருக்கும்.
பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என தனி கோச்சுகளும் ஒதுக்கப்பட்டிருக்கும்.