Loading...
100% இந்திய தயாரிப்பு: ஏகே-203 'ஷேர்' துப்பாக்கி சோதனை வெற்றி
ஏகே-203 'ஷேர்' துப்பாக்கி சோதனை வெற்றி

100% இந்திய தயாரிப்பு: ஏகே-203 'ஷேர்' துப்பாக்கி சோதனை வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
05:04 pm

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் இந்தியா ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. முழுவதுமாக 100 சதவீதம் இந்திய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட AK-203 'Sher' துப்பாக்கியின் முதல் மாதிரி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வா ஆயுத தொழிற்சாலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) நிறுவனத்தால் முழுமையாக இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த துப்பாக்கி, சரமாரியாகச் சுடும் 'பர்ஸ்ட் ஃபயரிங்' சோதனையிலும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்படைப்பு

இந்திய ராணுவத்திடம் செப்டம்பரில் ஒப்படைப்பு

வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய ராணுவத்தின் கள சோதனைகளுக்காக இந்த துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளன.

2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ஆயுத படைகளுக்கு சுமார் 6 லட்சம் ஏகே-203 ஷேர் துப்பாக்கிகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு 100 வினாடிக்கும் ஒரு துப்பாக்கி என்ற வேகத்தில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

தொழில் நுட்பம்

இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக உயர்தரத் தொழில் நுட்பம்

1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்சாஸ் (INSAS) துப்பாக்கிகளுக்குப் பதிலாக இந்த 'ஷேர்' துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இன்சாஸ் துப்பாக்கியின் எடை 4.15 கிலோவாகவும், இலக்கு வரம்பு 400 மீட்டராகவும் இருந்தது.

ஆனால் 3.6 கிலோ மட்டுமே எடைகொண்ட ஏகே-203 ஷேர் துப்பாக்கியானது 800 மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

மேலும் இன்சாஸில் 20 தோட்டாக்கள் மட்டுமே அடைக்க முடியும் என்ற நிலையில், இதில் 30 தோட்டாக்களை அடைக்க முடியும்.

ADVERTISEMENT