தனி நபர் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்? வருமான வரித்துறை விதிகள்
தனி நபர் ஒருவர் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம், இதற்கு வருமான வரித்துறை விதிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். உங்களிடம் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆதாரங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இதற்கு அபராதம் விதிக்கக்கூடும். எவ்வளவு எடுக்கலாம்? ஒரு காலாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். அத்தோடு வங்கியில் 50,000 அதிகமாக பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுத்தாலோ பான் கார்டை வங்கியில் இணைத்திருக்க வேண்டும். இதன் மூலம் வருமான வரித்துறை உங்கள் பான் எண் வைப்பு தொகையை சரிபார்க்கும்.
தனி நபர் எவ்வளவு பணத்தை வைத்து கொள்ளலாம் - வருமான வரித்துறையின் விதிகள் இதுதான்
அதேபோன்று, 2 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை வாங்கினால், பான் ஆதார் கட்டாயம் வழங்க வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி 1 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தினாலும் வருமான வரித்துறை கண்காணிப்புக்கு வரக்கூடும். முக்கியமாக எந்த வங்கியிலும் 2 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும். மேலும், வருமானத்துறை கணக்கின் படி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றால் வங்கி வாயிலாகப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். இப்படி லட்சக்கணக்கில் கணக்கு இல்லாமல் பணத்தை புழங்கினால் வருமான வரித்துறை உங்களுக்கு அபராதம் விதிக்ககூடும். எனவே கவனத்துடன் பண பரிமாற்றம் செய்யவேண்டும்.