உங்கள் வீட்டின் WiFi வேகமாக செயல்பட இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!
இன்றைய காலக்கட்டத்தில் இணைய வசதி என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதிலும், மாத கட்டண ரீசார்ஜ் செய்வதை தவிர்த்து, வீட்டில், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம், ஓடிடி பயன்பாடுகளுக்கு Wi-Fi பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அப்படி Wi-Fi பயன்படுத்துவோர் சிலர் அதிக பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது கிடைப்பதில்லை என கூறுவது உண்டு. இதற்கு, முறையான பராமரிப்பு இன்மையை ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். உங்கள் வைஃபை சிறப்பான கனெக்டிவிட்டியை கொடுப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கே தெரிந்துகொள்வோம். வைஃபை இன்ஸ்டால் செய்யும் இடத்தில், சிக்னல் சரியாக செல்ல இடையூறாக இருக்கும் பொருட்களை எடுத்துவிடுங்கள். சிக்னல் வேகம் சீராக இருக்கும் இடத்தில், ரூட்டரை வைத்துவிடுங்கள்.
வீட்டு Wi-Fi கனெக்ஷன் வேகமாக செயல்பட செய்ய வேண்டியவை;
அடுத்து, Wi-Fi சிக்னலை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி ரிப்பீட்டரை (Repeater) பயன்படுத்துவது. இவை, புதிதாக சிக்னலை உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் உங்கள் வைஃபை சிக்னலை மீண்டும், மீண்டும் வெளிப்படுத்தும். இதனால் சிக்னல் பூஸ்ட் செய்யப்படும். அதேப்போல் சில ஆன்டனாக்களைக்கொண்டும் வைஃபை சரிசெய்ய முடியும். WiFi Firmware கடைசியாக ரூட்டர் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது ஃபார்ம்வேர் (Firmware) அப்டேட்களை வெளியிடுவர். இதனை பயன்படுத்தி, உங்கள் ரூட்டரை அடிக்கடி அப்கிரேட் (Upgrade) செய்வது அவசியமான ஒன்று. இவை உங்களின் வைஃபையின் சிக்னலை பூஸ்ட் செய்வது மட்டுமின்றி புதிய அம்சங்களைப் பயன்படுத்தவும் உதவும். இவைகள் மட்டுமின்றி வைஃபை கனெக்ஷனை சரியான முறையில் நீங்கள் பராமரித்து வந்தாலே சிக்னல் தடையில்லாமல் கிடைக்கும்.