Page Loader
2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு;
2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் 6.1 வீழ்ச்சியடையும் என ஐஎம் எஃப் கணிப்பு

2023ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதம் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! ஐஎம்எஃப் கணிப்பு;

எழுதியவர் Siranjeevi
Jan 31, 2023
11:19 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 2023 ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதமாக சரியும் என சர்வதேச நிதியம்(IMF) கணித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட சர்வதேச நிதியம் உலகப் பொருளாதார தற்சமய அறிக்கையை படி, 2023 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தற்போதைய நிலையிலிருந்து 2.9 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆசிய கண்டத்தில் 2023 மற்றும் 2024ல் பொருளாதார வளர்ச்சி முறையே 5.3% மற்றும் 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 2022இல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் இருந்து 2023இல் 2.9 சதவீதம் என்று குறைந்து 2024ல் 3.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் ஆய்வுத் துறை தலைமை பொருளியல் நிபுணர்

பணவீக்கம்

பணவீக்கம் இந்தியாவுக்கு நல்ல செய்தியா?

இயக்குநர் பியர் ஒலிவியர் கூரின்சாஸ் தெரிவிக்கையில், "கடந்த அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி நாங்கள் கணித்ததில் மாற்றமில்லை. நடப்பு ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என்றளவிலேயே இருக்கும். அதன் பின் 6.1 சதவீதமாகக் குறையும். இதற்கு வெளிவட்டார அழுத்தங்களே பெரும் காரணமாக இருக்கும்" என்று தெரிவித்தார். இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கும் என IMF கணித்தாலும், நாட்டின் பணவீக்கமும் குறையும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறையும் என்றும் 2024ல் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறையும் என்றும் கணித்துள்ளது.