Loading...
ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்! சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு ₹4 லட்சம் பரிசு
ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்

ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்! சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு ₹4 லட்சம் பரிசு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
04:42 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஐஐடியில் இயங்கி வரும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளி, வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்அப் உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான 1 வார நேரடிப் பயிற்சிப் பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. ஏஐ சார்ந்த புதுமையான யோசனைகளை சிறந்த தொழிலாக மாற்ற விரும்புவோருக்கு உதவும் வகையில் இந்த சிறப்புப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை ஐஐடி வளாகத்தில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

விண்ணப்பம்

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் தகுதிகள் மற்றும் கடைசி நாள்

இந்த பயிற்சி பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 27 கடைசி நாளாகும்.

இறுதி ஆண்டு பி.டெக், எம்.டெக், பிஎச்.டி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் புதிய ஏஐ ஸ்டார்ட்அப் தொடங்க விரும்புவோர் இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும்.

வழிகாட்டுதல்

கூகுள் முன்னாள் துணைத் தலைவர் வழிகாட்டுதல்

எக்ஸ், ஐபிஎம் மற்றும் கூகுள் பயன்பாட்டுப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவருமான லட்சுமி சங்கர் இந்தப் பயிற்சியை முதன்மையாக செயல்படுத்தவுள்ளார்.

ஏஐ சந்தையின் வாய்ப்புகளைக் கண்டறிவது, குறைந்தபட்ச தயாரிப்பு மாதிரி உருவாக்குவது, நிதி திரட்டும் உத்திகள், வாடிக்கையாளர்களைக் கவரும் வழிகள் மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்துத் துறை சார்ந்த நிபுணர்கள் இதில் விரிவான நேரடி பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

ADVERTISEMENT

பரிசுத் தொகை

சிறந்த பிட்ச் யோசனைக்கு ₹4 லட்சம் பரிசு

பயிற்சியின் இறுதி நாளில் சிறப்பு பிட்ச் டே நிகழ்வு நடைபெறும்.

இதில் பங்கேற்பாளர்கள் தங்களது ஏஐ ஸ்டார்ட்அப் யோசனைகளை துறை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் மிகச் சிறந்த ஏஐ ஸ்டார்ட்அப் யோசனையாகத் தேர்ந்தெடுக்கப்படும் திட்டத்திற்கு, தொழிலை மேலும் விரிவுபடுத்த ஊக்குவிக்கும் விதமாக ₹4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT