Page Loader
டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்... என்ன காரணம்?
ட்விட்டர் கணக்குகள் நீக்கம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட எலான் மஸ்க்

டிவிட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும்... என்ன காரணம்?

எழுதியவர் Prasanna Venkatesh
May 09, 2023
09:47 am

செய்தி முன்னோட்டம்

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை தளத்தில் இருந்து நீக்குவதன் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவர், தன்னுடைய ட்விட்டர் பதிவு ஒன்றிய மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்நிறுவனக் கொள்கைகளின்படி தங்கள் கணக்கு நிரந்தரமாக நீக்கப்படாமலிருக்க ட்விட்டர் பயனர்கள் 30 நாட்களுக்கு ஒருமுறையாவது தங்களுடைய ட்விட்டர் கணக்கை லாக்இன் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கையை எந்த வகையில் எப்போது அந்நிறுவனம் மேற்கொள்ளும் என மேற்கொண்டு எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. மேலும், செயல்படாத கணக்குகள் நீக்கப்படும் இந்த நடவடிக்கையினால் மற்றவர்களுடைய ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருக்கிறது எனவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post