NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ட்விட்டரின் பிரபல பறவை லோகோ ஏலத்திற்கு வருகிறதாம் 
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டரின் பிரபல பறவை லோகோ ஏலத்திற்கு வருகிறதாம் 
    12 அடி உயரமுள்ள பிரபல சின்னமான பறவை ஏலத்திற்கு வருகிறது

    ட்விட்டரின் பிரபல பறவை லோகோ ஏலத்திற்கு வருகிறதாம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2025
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் முன்னர் பொருத்தப்பட்டிருந்த 12 அடி உயரமுள்ள பிரபல சின்னமான பறவை ஏலத்திற்கு வருகிறது.

    எலான் மஸ்க் ட்விட்டரை X என மறுபெயரிட்ட பிறகு, மார்க்கெட் தெருவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தை அலங்கரித்த பிரம்மாண்டமான பலகை அகற்றப்பட்டது.

    சமூக ஊடக வரலாற்றின் இந்த தனித்துவமான படைப்புக்கான ஏலங்கள் தற்போது RR ஏலத்தின்படி $21,664 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஏலம் மார்ச் 20 வரை திறந்திருக்கும்.

    ஷிப்பிங் செலவுகள்

    ஷிப்பிங் செலவுகள் மற்றும் அளவு விவரங்கள்

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தற்போதைய சேமிப்பு வசதியிலிருந்து பறவை லோகோவை எடுத்துச் செல்ல கூடுதல் பணத்தைச் செலவிடவும் ஏலத்தில் எடுப்பவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    இந்த லோகோ சுமார் 12 அடிக்கு 8 அடி அளவும், 254 கிலோ எடையும் கொண்டது.

    ஏலப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட ஒரு YouTube காணொளி, அந்த அடையாளத்தை அதன் அசல் இடத்திலிருந்து அகற்ற ஒரு கிரேன் மற்றும் பல தொழிலாளர்கள் தேவைப்பட்டதைக் காட்டுகிறது.

    கடந்த கால விற்பனைகள்

    ட்விட்டர் நினைவுப் பொருட்களின் முந்தைய ஏலங்கள்

    "லாரி" என பெயரிடப்பட்ட இந்த ட்விட்டர் லோகோ (முன்னாள் ட்வீப்ஸ் பெயரிட்டது போல) ஏலத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. 2022 ஆம் ஆண்டில் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, நிறுவனத்தின் முன்னாள் அலுவலகங்களில் இருந்து பல பொருட்கள் 2023 இல் ஏலம் விடப்பட்டன.

    இந்த லோகோவின் சிறிய பதிப்புகள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தன, ஒரு அலுவலக சிலை $100,000க்கு விற்கப்பட்டது, மற்றொரு பெரிய பறவை லோகோ அந்த விற்பனையின் போது வெளியிடப்படாத விலைக்கு விற்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    ட்விட்டர் புதுப்பிப்பு
    எலான் மஸ்க்
    எக்ஸ்

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    ட்விட்டர்

    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்
    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன் தனுஷ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா
    ஜனவரி 12ல் வெளியாகும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப்பின் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படம் இயக்குனர்

    ட்விட்டர் புதுப்பிப்பு

    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர்
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள் ட்விட்டர்
    ட்விட்டரின் அடுத்த அப்டேட்: வணிக நிறுவனங்களுக்கான ப்ளூ டிக் அறிமுகம் ட்விட்டர்
    ட்விட்டர் ப்ளூ சேவை: பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு, உரையாடல்களில் முன்னுரிமை தரவரிசைகளை வழங்குகிறது ட்விட்டர்

    எலான் மஸ்க்

    எலான் மஸ்க்கின் மற்றுமொரு புதுமை திட்டம்: STEM மையப்படுத்தப்பட்ட ஆட் அஸ்ட்ரா பாலர் பள்ளி தொழில்நுட்பம்
    இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து தேர்தல்
    டெஸ்லா, ஸ்டார்லிங்க் எப்போது இந்தியாவில் நுழையும்? வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில் பியூஷ் கோயல்
    டென்னிஸ் பந்துகளை லாவகமாக கேட்ச் பிடிக்கும் டெஸ்லாவின் ரோபோ; காண்க  டெஸ்லா

    எக்ஸ்

    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி இந்தியா
    'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம்  வைரமுத்து
    எக்ஸ் தளத்தில் உலகளாவிய பயன்பாட்டு சிக்கல், ட்ரெண்டிங்கில் 'Twitter Down' ஹேஷ்டேக் ட்விட்டர்
    ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ரஜினி ஹாஷ்டேக்; காரணம் என்ன? ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025