Page Loader
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கிய HP 
இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கிய HP

இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கிய HP 

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 20, 2023
11:24 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை தொடங்கியிருக்கிறது லேப்டாப் தயாரிப்பு நிறுவனமன HP. இந்தியாவில் புதிய லேப்டாப் வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பட்ஜெட் விலையிலான லேப்டாப்களை வழங்க இந்தத் திட்டத்தை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு உலகின் பிற நாடுகளிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது HP நிறுவனம். இந்தியாவில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இன்றும் லேப்டாப் மற்றும் கணனியின் பயன்பாடு குறைவான அளவிலேயே இருக்கிறது. லேப்டாப்களின் விலையும், அவற்றின் பயன்பாடு குறைவாக இருப்பதற்கா காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கிருக்கிறது HP. எனவே, புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்களை குறைந்த விலையில் வழங்குவதன் மூலம் கிராமப்புற பகுதிகளிலும் லேப்டாப்பின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியா

இந்தியாவில் HPயின் திட்டம் என்ன? 

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லேப்டாப்களை, இரண்டாவது பயனாளருக்கு விற்பனை செய்வதற்கு முன்பு அதன் தரத்தை பரிசோதனை செய்து தேவையான மாற்றங்கள் மேம்பாடுகள் செய்யப்படுவதையே புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் எனக் கூறப்படுகின்றன. நம்பகமான நிறுவனமே இந்த செயல்முறையை மேற்கொள்வது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும். மேலும், வாரண்டியுடன் புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்களை விற்பனை செய்யவிருக்கிறது HP. இது தவிர சிறு வணிகங்களுக்கு சந்தா முறையில் இரண்டு ஆண்டுகள் வரை குறிப்பிட்ட காலத்திற்கு லேப்டாப்களை வாடகை முறையில் வழங்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறது அந்நிறுனம். முதலில் இந்தத் திட்டத்தின் கீழ் லேப்டாப்களில் மட்டும் கவனம் செலுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது HP. அதனைத் தொடர்ந்து பிற மின்னணு சாதனங்களையும் இத்திட்டத்தின் கீழ் வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.