ஐபோனில் ஸ்க்ரோலிங் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பது எப்படி: ஒரு எளிய வழிகாட்டி
ஐபோன் அல்லது ஐபேடில் வழக்கமான ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது நேரடியானது மற்றும் எளிதானது. ஒரே நேரத்தில் Up வால்யூம் பட்டனையும், பவர் பட்டனையும் பிரஸ் செய்தால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். உடனே ஒரு ஸ்கிரீன்ஷாட் கிளிக் ஆகி, அதன் சிறிய பிரிவியூ கீழ்-இடது மூலையில் தோன்றும். ஆனால் உங்கள் திரையில் தோன்றுவதை விட நீளமாக இருக்கும் இணையதளக் கட்டுரைகளைப் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க விரும்பினால் என்ன செய்வது? ஐபோன் ஸ்க்ரோலிங் அல்லது முழு பக்க ஸ்கிரீன்ஷாட்களையும் கைப்பற்ற முடியுமா? முடியும், எப்படி என்பது தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஸ்கிரீன்ஷாட் பல்வேறு வகைகளைப் தெரிந்து கொள்ளுங்கள்
வெற்றிகரமாக ஸ்கிரீன்ஷாட் எடுத்த பிறகு, உங்கள் திரையில் தோன்றும் அந்த சிறுபடத்தைத் கிளிக் செய்யவும். ஸ்கிரீன்ஷாட் எடிட் பயன்முறையில் விரிவடைந்து, திரையின் மேற்புறத்தில் சில கருவிகளை வெளிப்படுத்தும். இங்கே, நீங்கள் "screen" மற்றும் "full page" விருப்பங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கலாம். பிந்தையதைத் தேர்ந்தெடுப்பதால் நீங்கள் ஸ்க்ரோலிங் ஸ்கிரீன்ஷாட்டை தேர்வு செய்யலாம். நீங்கள் எடுக்கவேண்டிய பகுதியை தேர்வு செய்தபிறகு, "done" என்பதைத் தட்டினால், ஸ்கிரீன்ஷாட்டை எங்கு சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கிறது. புகைப்படங்கள் பயன்பாடு, கோப்புகள் பயன்பாட்டில் சேமிப்பது அல்லது "படத்துடன் கூடிய விரைவுக் குறிப்பை" உருவாக்குவது ஆகியவை விருப்பங்களில் அடங்கும்.