Page Loader
உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்
கிரெடிட் ஸ்கோரை உயர்த்த என்ன செய்யவேண்டும்

உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்

எழுதியவர் Siranjeevi
Mar 06, 2023
04:03 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால் அதில் முக்கியமாக கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில், கடன் விண்ணப்ப செயல்முறையில் உங்கள் கிரெடிட் தகவலறிக்கை (CIR) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைந்த ஸ்கோர் உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்புகளை பாதிக்கலாம். எனவே நீங்கள் ஒரு குறைந்த CIBIL கிரெடிட் ஸ்கோர் வரலாற்றை கொண்டிருந்து அதை முன்னேற்ற விரும்பினால் உங்களுக்கு கிடைக்கப்பெறும் வழிகளை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு CIBIL மதிப்பெண் 300 முதல் 900 வரை இயங்குகிறது, 300 என்பது மோசமான மதிப்பெண்ணைக் குறிக்கிறது மற்றும் 900 சிறந்த மதிப்பெண்ணைக் குறிக்கிறது.

கிரெடிட் ஸ்கோர்

உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த செய்ய வேண்டியவை

கிரெடிட் ஸ்கோரை உயர்த்த என்ன செய்யலாம்? முதலில் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்திவிடுங்கள். நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் அடைத்து விடுங்கள். உங்கள் வரம்புக்கு மீறி கடனை பெறுவதும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அடுத்து, ஒரு வேளை உரிய நேரத்தில் பணத்தை செலுத்த முடியாமல் போனால் வங்கியிடம் தெரிவித்து காலத்தை தேர்ந்தெடுங்கள். அதேபோன்று, உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால் உடனடியாக வேறு வங்கிக்கு அப்ளை செய்யவேண்டாம். அவர்களும் நிராகரித்தால் CIBIL மதிப்பெண் பாதிப்படையும். கடனை எப்பொழுதும் உங்கள் வருமான கட்டுக்குள் இருப்பதை போன்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் கடனை செலுத்தி வர உங்கள் ஸ்கோர் மெல்ல மெல்ல உயரும்.