Page Loader
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி?
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்தலாம் என மெட்டா அறிவிப்பு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ அழைப்பில் அவதார் பயன்படுத்துவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 12, 2023
05:58 pm

செய்தி முன்னோட்டம்

முகத்தை காட்டாமல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ அழைப்பில் பங்கேற்க நினைப்பவர்களுக்காக, மெட்டா நிறுவனம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி அவதார்களைப் பயன்படுத்தி, மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள பயனர்களை அனுமதிப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலும் கிடைக்கிறது. மேலும், அவதார் உருவாக்கம் மற்றும் வீடியோ அழைப்பில், நமது உடல் மற்றும் முக அசைவுகளை பிரதிபலிக்கும் அனிமேஷன் செய்யப்பட்ட அவதார் ஸ்டிக்கர்களை, பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரும் வழிமுறைகளை எளிதாக்கும் திட்டத்திலும் மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீடியோ அழைப்பில் தங்கள் முகங்களைக் காட்ட விரும்பாதவர்களுக்கு இது பயனுள்ள அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

how to create avatar in instagram video calls

இன்ஸ்டாகிராமில் அவதாரை உருவாக்கும் முறை

இன்ஸ்டாகிராமில் உங்கள் சுயவிவர (profile) பக்கத்திற்கு சென்று, சுயவிவரப் படத்தை கிளிக் செய்யவும். பின்னர் 'எடிட் ப்ரொபைல்' என்பதை கிளிக் செய்து, 'கிரியேட் அவதார்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அடுத்து, உங்கள் அவதாரின் தோல் நிறத்தைத் தேர்வுசெய்ய, 'ஸ்டார்ட்' என்பதைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான், உங்களுக்கான தனி அவதார் உருவாகி விடும். மாற்றங்களைச் சேமித்துவிட்டால், பின்னர் அவதார் செயல்பட ஆரம்பித்துவிடும். இதையே பேஸ்புக்கிலும் பயன்படுத்த, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை ஒருங்கிணைத்தால் போதுமானது. இதற்கிடையே, செல்ஃபிகளில் இருந்து அவதார்களை உருவாக்கும் அம்சத்தையும் விரைவில் வழங்குவதாக மெட்டா அறிவித்துள்ளது.