Page Loader
ஹேக்கர்களுக்கு உதவி செய்யும் சாட்ஜிபிடி: கேள்விக்குறியாகும் Ai தொழில்நுட்பம்
ஹேக்கர்களுக்கு வரப்ரசாதமாய் மாறிய சாட்ஜிபிடி

ஹேக்கர்களுக்கு உதவி செய்யும் சாட்ஜிபிடி: கேள்விக்குறியாகும் Ai தொழில்நுட்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

ஓபன் எஐ (Open AI) துணை கொண்டு உருவாக்கப்பட்ட, சாட்போட் கருவியான, சாட் ஜிபிடி, அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், நியூயார்க் நகர பள்ளிகள் கூட்டமைப்பு, மாணவர் நலன் கருதி, இந்த சாட்போட் பயன்பாட்டை தடை செய்தனர். இப்போது, இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான Check Point இன் புதிய அறிக்கையின்படி, ஹேக்கர்கள், இந்த பாட்டின் உதவியுடன், ஹேக்கிங் குறியீடு மற்றும் தீம்பொருளை எழுத பயன்படுத்தப்படலாம். சைபர் கிரைமினல்கள், ஹேக்கர்கள், இந்த ChatGPT ஐப் பயன்படுத்தி சக்திவாய்ந்த ஹேக்கிங் கருவிகளை உருவாக்கி, இளம் பெண்களைப் பிரதிபலிக்கும் வகையில், புதிய சாட்போட்களை உருவாக்குகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சாட்ஜிபிடி

சாட்ஜிபிடி மோசடியாளர்களின் கருவியா?

இதன் குறியீடு உருவாக்கும் திறன், ஹேக்கர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் உள்ளது. சைபர் தாக்குதல்களைத் தொடங்க, ransomware ஐ உருவாக்க எளிதாக உதவும் என மற்றொரு அறிக்கை குறிப்பிடுகிறது. மறுபுறம், அலெக்ஸ் ஹோல்டன் என்ற பாதுகாப்பு வல்லுநர், டேட்டிங் மோசடி செய்பவர்கள், சாட்ஜிபிடியை பயன்படுத்தி, போலியான நபர்களை உருவாக்குவதை தாம் கண்டதாக கூறினார். மோசடி செய்பவர்கள், அவர்களின் இலக்குகளுடன் நீண்ட உரையாடல்களை நடத்தவும், பெண்களை போல ஆள்மாறாட்டம் செய்ய நபர்களை உருவாக்குகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். மோசடி செய்பவர்கள், ChatGPT ஐப் பயன்படுத்தி, அதிக இலக்கு கொண்ட சமூக பொறியியல் மோசடிகள் மற்றும் ஃபிஷிங் பிரச்சாரங்கள் தொடங்கப்படலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதுகாப்பு அறிக்கைகளுக்கு, OpenAI இன்னும் அதிகாரபூர்வ பதிலளிக்கவில்லை.