Page Loader
32 ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!
ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்

32 ஆபத்தான நீட்டிப்புகளை வெப் ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 05, 2023
10:52 am

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனமானது, தவறான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 32 குரோம் நீட்டிப்புகளை (Chrome Extensions) தங்கள் வெப் ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது. குரோம் உலாவியில் பயனர்கள் கூடுதல் வசதிகளை பயன்படுத்துவதற்காக நீட்டிப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதனை இணையத்தை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், உருவாக்கி கூகுளின் குரோம் வெப் ஸ்டோரில் வெளியிடலாம். தற்போது தங்கள் வெப் ஸ்டோரில் இருந்து தவறான நோக்கத்துடன் உருவாக்கி வெளியிடப்பட்ட 32 நீட்டிப்புகளை நீக்கியிருக்கிறது கூகுள். இந்த நீட்டிப்புகளை பயனர்கள் தங்கள் உலாவியில் பயன்படுத்த வந்தாலும், அதனை நீக்கிவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. குரோம் வெப் ஸ்டோரில் இருந்து இந்த நீட்டிப்புகளை நீக்குவதன் மூலம், ஏற்கனவே அதனை பதிவிறக்கம் செய்த பயனர்களின் கணினியில் இருந்து அவை நீக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்

எந்த விதமான பாதிப்பு: 

இந்த நீட்டிப்புகளானது பயனர்களின் தேடுதல் பக்கங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களைக் காட்டவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், சில நீட்டிப்புகளின் மூலம் பயனர்களின் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உள்நுழைவு தரவுகள், வங்கித் தரவுகள் ஆகியவையும் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்புகள் தங்கள் கணினியில் உள்ள தகவல்களை திருடுகிறதென்றோ, தேவையில்லாத உள்ளடக்கங்களைக் காட்டுகிறதென்றோ பயனர்களால் உணர முடியாத அளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். எனவே, பயனர்கள் தங்கள் கணினிகளில் உள்ள ஆபத்து நிறைந்த நீட்டிப்புகளை நீக்கக்கூறி எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூகுள் நீக்கிய 32 நீட்டிப்புகளும் பயனர்களால் 75 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post