
கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
பிக்சல் 6a-யின் அப்கிரேடட் வெர்ஷனான பிக்சல் 7a-வை இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் தங்களுடைய I/O நிகழ்வின் போது வெளியிட்டது கூகுள். கூகுளின் பிக்சல் 7 சீரிஸில் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது இந்த பிக்சல் 7a. இந்த மொபைலில் உள்ள வசதிகள் என்னென்ன மற்றும் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
வசதிகள்:
6.1 இன்ச் OLED டிஸ்பிளே
கூகுள் டென்சார் G2 ப்ராசஸர்
64MP+13MP ரியர் கேமரா: 13MP செல்ஃபி கேமரா
4385 mAh பேட்டரி
18W வயர்டு சார்ஜிங்: 7.5W வயர்லெஸ் சார்ஜிங்
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
5G வசதி
ஆண்ட்ராய்டு 13
விலை:
8 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.43,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
6a-வின் அப்கிரேடாக வெளியாகியிருக்கும் இந்த பிக்சல் 7a-வில் அனைத்து வசதிகளையும் சற்றே அப்கிரேடு செய்திருக்கிறது கூகுள். ஆனால், பேட்டரி மட்டும் 6a-வை விட கொஞ்சம் குறைந்த அளவைக் கொடுத்திருக்கிறது கூகுள்.
கூகுளின் பிக்சல் போன்களின் பெர்ஃபாமன்ஸைப் பற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. சிறப்பான மிகச் சிறப்பான ப்ராசஸர் பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கிறது 7a.
கேமராவும் இந்த செக்மண்டில் மிகச் சிறப்பாகவே பெர்ஃபாமன்ஸையே அளிக்கிறது. பேட்டரி ஒரு நாள் தான் தாக்குப்பிடிக்கிறது. கூகுள் கொஞ்சம் பெரிய பேட்டரியோ அல்லது ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையே பரிசீலைனை செய்திருக்கலாம். வயர்லெஸ் சார்ஜி மற்றும் IP ரேட்டிங்கும் இருப்பது சிறப்பு.
மொத்தத்தில் பிக்சல் 7 சீரிஸில் மற்றொரு சிறப்பான ஸ்மார்ட்போனை அளித்திருக்கிறது கூகுள்.