Page Loader
கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி!
ஃபிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் மாடல்களுக்கு செம்ம ஆஃபர்

கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி!

எழுதியவர் Siranjeevi
Feb 28, 2023
10:20 am

செய்தி முன்னோட்டம்

கூகுளின் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 6ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் தளமான ஃபிளிப்கார்ட்டில் பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதாவது, Pixel 6a மற்றும் Pixel 7 ஆகிய இரு மாடல்களுக்கும் 10,000 வரை தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கின்றன. இந்த போன்கள் சிறந்த கேமரா போன்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், Pixel 6a 128GB சேமிப்பு மாடலின் ஆரம்ப விலை ரூ.29,999 உடன் Flipkart இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் கடந்த ஆண்டு ரூ.40,000க்கும் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் ரூ.30,000க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல், Flipkart இல் Pixel 7 தள்ளுபடி விலையில் Rs 57,099 இல் கிடைக்கிறது, இது அதன் அசல் விலையான ரூ 59,999 லிருந்து குறைந்துள்ளது.

கூகுள் பிக்சல்

Pixel 7 and Pixel 6a ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,000 தள்ளுபடி

எனவே, இந்த 5ஜி போனில் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ரூ.3,000 தள்ளுபடி சலுகையைப் பெறுகிறார்கள். ஆக்சிஸ் வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு ரூ.7,000 தள்ளுபடி சலுகை உள்ளது. மேலும், 6.71 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இதில் 50MP முதன்மை கேமரா உள்ளது. இது தவிர, இது 48MP மற்றும் 12MP இரண்டாம் நிலை கேமராக்களுடன் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 11.1 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாதனம் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் Li-ion 5003mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.