NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதிய மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வரும் கூகுள்.. இந்தியாவிலும் வெளியிடப்படுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வரும் கூகுள்.. இந்தியாவிலும் வெளியிடப்படுமா?
    புதிய மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வரும் கூகுள்

    புதிய மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வரும் கூகுள்.. இந்தியாவிலும் வெளியிடப்படுமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 07, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு புதிய 'பிக்சல் வாட்ச்' மூலம் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அடியெடுத்து வைத்து கூகுள். மேம்படுத்தப்பட்ட சிப்பைப் பயன்படுத்தாமல், பழைய சிப்பைப் பயன்படுத்தியதன் காரணமாக, பின்னடைவுகளைச் சந்தித்து பயனர்களிடையே டிஸ்லைக்குகளைப் பெற்றது பிக்சல் வாட்ச்.

    தற்போது கூகுள் ரசிகர்களுக்கான நற்செய்தியாக, புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை விரைவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    முந்தைய வாட்ச்சில் பயனர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை சரிசெய்த, மேம்படுத்தப்பட்ட புதிய பிக்சல் வாட்ச் 2-வை உருவாக்கி வருகிறது கூகுள்.

    இதுவரை வெளியான ஸ்மார்ட்வாட்ச்களில் வழங்கப்படாத, பயனர்களே எதிர்பார்க்காத வகையில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டு வெளியாகவிருக்கிறது இந்த புதிய பிக்சல் வாட்ச் 2. முதல் ஸ்மார்ட்வாட்சை கூகுள் இந்தியாவில் வெளியிடாத நிலையில், புதிய வாட்சை இந்தியாவிலும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள்

    கூகுள் பிக்சல் வாட்ச் 2: என்னென்ன அம்சங்களைக் கொண்டு வெளியாகவிருக்கிறது 

    புதிய ஸ்மார்ட்வாட்சில் குவால்காம் ஸ்னாப்டிகாரன் W5 ஜென் 1 ப்ராசஸரைப் பயன்படுத்தவிருக்கிறது கூகுள். இது 2018 எக்ஸினோஸ் 9100 சிப்பை விட மேம்பட்ட ஒரு சிப்செட்டாகப் பார்க்கப்படுகிறது.

    புதிய வாட்ச்சில் அல்ட்ரா-வைடு பேண்டையும் (UWB) பயன்படுத்தவிருக்கிறது கூகுள். இதன் மூலம் டிவைஸ் ட்ராக்கிங் மற்றும் பைண்டு மை டிவைஸ் உள்ளிட்ட வசதிகளை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் பயன்படுத்த முடியும்.

    மேலும், புதிய ஸ்மார்ட்வாட்ச்சை டிஜிட்டல் கார் சாவியாகவும் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் அளிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை பிற கார் தயாரிப்பு நிறுவனங்களுடைய இணைந்து கூகுள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம்.

    வை-ஃபை மற்றும் செல்லுலார் வசதிகளைக் கொண்ட வேரியன்ட்களையும் விதவிதமான குறியீட்டுப் பெயர்களுடன் கூகுள் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கூகுள்

    கூகுள் I/O நிகழ்வில் வெளியிடப்பட்ட புதிய சாதனங்கள் என்னென்ன? ஸ்மார்ட்போன்
    கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்! செயற்கை நுண்ணறிவு
    கூகுள் I/O நிகழ்வு.. AI சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவு
    ஆண்ட்ராய்டு 14-ன் 2-வது பீட்டா வெர்ஷனை வெளியிட்டது கூகுள்.. அப்டேட் செய்து எப்படி? ஆண்ட்ராய்டு

    கேட்ஜட்ஸ்

    கூகுளின் பிக்சல் டேப்லட்டை விட சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் பேடு, ஏன்? கூகுள்
    பயனாளர்களுக்கு இலவச டிவி.. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்! அமெரிக்கா
    இளம் வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை! ஸ்மார்ட்போன்
    ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன? ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025