Loading...
போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி! கூகுளின் புதிய AI கண்டறியும் தளம் வெளியீடு
கூகுள் நிறுவனம் SynthID Detector எனும் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி! கூகுளின் புதிய AI கண்டறியும் தளம் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
02:51 pm

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் உலா வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் உருவாக்கப்பட்டவையா அல்லது உண்மையானவையா என்பதை பொதுமக்கள் எளிதில் கண்டறியும் வகையில் கூகுள் நிறுவனம் SynthID Detector எனும் புதிய இணையதளத்தை, உலகளாவிய அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் நானோ பனானா, வியோ, லைரியா போன்ற AI மாடல்களும், ஜெமினி, ஃபுளோ, புரொட்யூசர் ஏஐ மற்றும் விட்ஸ் போன்ற உருவாக்கக் கருவிகளும் தங்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில் நுட்பமான நீர்முத்திரையை தானாகவே பதித்துவிடும். இந்த 'SynthID' முத்திரை கண்ணுக்குத் தெரியாது என்பதால், கோப்பின் அமைப்பை மாற்றினாலும் அல்லது கிராப் செய்தாலும் இதன் டிஜிட்டல் அடையாளத்தை எளிதில் அழிக்க முடியாது.

ஆதரவு

எளிய கோப்பு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு

கூகுள் தவிர ஓபன்ஏஐ மற்றும் என்விடியா போன்ற நிறுவனங்களும் இத்தொழில்நுட்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றன.

இப்புதிய தளம் JPG, JPEG, PNG போன்ற பல்வேறு புகைப்பட வடிவங்களையும், MP4, MOV போன்ற வீடியோ வடிவங்களையும், ஆடியோ வடிவங்களையும் ஆதரிக்கிறது.

மேலும், இச்சேவையை கூகுள், ஜெமினி செயலி மற்றும் குரோமிலும் நேரடியாக ஒருங்கிணைத்துள்ளது.

தற்போது தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இத்தளத்தின் மூலம் தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர்.

இருப்பினும், பிற நிறுவனங்கள் வேறு வகையான நீர்முத்திரை முறைகளைப் பயன்படுத்துவதால், அனைத்து AI படைப்புகளையும் இத்தளத்தால் முழுமையாகக் கண்டறிய முடியாது.

மேலும், ஒரு படம் முழுமையாக AI-ஆல் உருவாக்கப்பட்டதா அல்லது சிறிய பகுதி மட்டுமே திருத்தப்பட்டதா என்பதைத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டுவதில் சில சவால்கள் உள்ளன.

ADVERTISEMENT