Loading...
இந்தியாவில் களமிறங்கிய கூகுளின் புதிய 'Dreambeans' AI செயலி; என்னென்ன சிறப்பம்சங்கள்?
இந்தியாவில் களமிறங்கிய கூகுளின் புதிய 'Dreambeans' AI செயலி

இந்தியாவில் களமிறங்கிய கூகுளின் புதிய 'Dreambeans' AI செயலி; என்னென்ன சிறப்பம்சங்கள்?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2026
02:08 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் தொடர் ஸ்க்ரோலிங் பழக்கத்தைக் குறைக்கும் நோக்கில், கூகுள் லேப்ஸ் அமைப்பின் புதிய சோதனை செயலியான Dreambeans இந்தியப் பயனர்களுக்கு கிடைக்குமாறு அதிகாரப்பூர்வமாகப் பரவலாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியேயான சர்வதேச சந்தையில் இச்செயலி அறிமுகப்படுத்தப்படும் முதல் நாடு இந்தியாவாகும். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இச்செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

'டிரீம்பீன்ஸ்' செயலியின் செயல்பாடுகள்

'டிரீம்பீன்ஸ்' என்பது பயனர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாள்தோறும் புதுப்பித்து வழங்கப்படும் ஒரு தனித்துவமான AI தகவல் தொகுப்பு தளமாகும்.

இச்செயலியைப் பயனர் தனது தனிப்பட்ட கூகுள் கணக்குடன் இணைக்கும் போது, கூகுள் காலெண்டர், ஜிமெயில், கூகுள் போட்டோஸ், Gemini, தேடுபொறி மற்றும் யூடியூப் ஆகிய தரவுகளை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்கிறது.

உதாரணமாக பயனரின் காலெண்டரில் உள்ள நண்பரின் பிறந்தநாளைக் கண்டறிந்து, அவரது ஆர்வங்களுக்கு ஏற்ப, "இந்த வெள்ளிக்கிழமை பிரையனின் பிறந்தநாளுக்குக் கேம்பிங் பரிசு யோசனைகள்" என்ற கார்டை உருவாக்கியளிக்கிறது.

பயனர்களுக்கு பிடித்த கதைகள் மற்றும் பரிந்துரைகளை புக்மார்க் செய்து பிற்கால பயன்பாட்டிற்கு சேமித்து வைக்கவும், நண்பர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

கட்டுப்பாடுகள்

பயனர்களின் தரவுப் பாதுகாப்பு & கட்டுப்பாடுகள்

புதிய இடங்கள், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள், உள்ளூர் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த நினைவூட்டல்களையும் இச்செயலி பயனர்களுக்கு நினைவூட்டுகிறது.

இது முழுமையாக சோதனைக் கட்டத்தில் உள்ள தொழில்நுட்பம் என்பதால், பயனர்களின் தனியுரிமைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான அமைப்புகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

பயன்பாட்டின் அமைப்புகள் மூலமாக எந்த நேரத்திலும் டிரீம்பீன்ஸ் சேகரித்த அனைத்துத் தரவுகளையும் பயனர் முற்றிலும் அழித்துவிட முடியும்.

எந்தெந்த கூகுள் செயலிகளிலிருந்து தரவுகளை எடுக்க வேண்டும் என்பதைப் பயனர்களே தேர்வு செய்யும் சுதந்திரமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT