மைன்கிராஃப்ட் விளையாட்டில் எண்டர் டிராகனை வீழ்த்திய 4 கூகுள் AI ஏஜென்ட்கள்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் நிறுவனம் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. கூகுள் டீப்மைண்ட் உருவாக்கிய 'Gemini 4 Argon' ஏஐ மாதிரியை கொண்ட 4 ஏஜென்ட்கள், உலகின் மிகவும் பிரபலமான Minecraft கணினி விளையாட்டின் இறுதி நகர்வான 'எண்டர் டிராகனை' மனிதர்களின் எந்தவித உதவியுமின்றி தன்னிச்சையாக வீழ்த்திச் சாதனை படைத்துள்ளன. மைன்கிராஃப்ட் விளையாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட உத்தியோ அல்லது வழிமுறைகளோ ஏஐ ஏஜென்ட்களுக்கு வழங்கப்படவில்லை. மைன்ஃப்ளேயர் திறந்த மூல நூலகத்தைப் பயன்படுத்தி விளையாட்டை இயக்கிய இந்த நான்கு ஏஜென்ட்களும், இன்-கேம் சாட் மற்றும் நினைவகப் பகிர்வு வாயிலாக தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டன.
ஏஐ ஏஜென்ட்கள்
பணிகளை தன்னிச்சையாக பிரித்துக் கொண்ட AI ஏஜென்ட்கள்
ஜேன்சிக்: விளையாட்டுக்குத் தேவையான கருவிகளை உருவாக்கியதுடன், எண்டர் டிராகன் இருக்கும் போர்ட்டலைக் கண்டுபிடிக்க உதவியது.
கில்டேனியா: உணவு மற்றும் பிற தேவையானப் பொருட்களைச் சேகரித்தது.
அவுராடியன்: பிரதான போர்ட்டலைச் செயல்படுத்துவதிலும், டிராகனின் ஆற்றலை அதிகரிக்கும் படிகங்களை அழிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.
புலிகேம்: மறைவிடங்களை உருவாக்கியதுடன், எண்டர் டிராகனுக்கு இறுதி அடியைக் கொடுத்து அதை வீழ்த்தியது.
கண்காணிப்பு
27 மணிநேரப் போராட்டமும் 'அப்சர்வர்' கண்காணிப்பும்
இந்த முழு விளையாட்டின் போது எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய Observer என்ற ஐந்தாவது ஏஐ ஏஜென்ட் கண்காணிப்பாளராகச் செயல்பட்டது.
மொத்தம் 27.23 மணிநேரம் நடைபெற்ற இந்த நீண்ட போரில், ஏஐ ஏஜென்ட்கள் 2,783 புரோகிராம்களை எழுதி இயக்கியதுடன், தங்களுக்குள் 229 செய்திகளைப் பரிமாறிக் கொண்டன.
விளையாட்டின் போது 605 முறை ஏஐ ஏஜென்ட்கள் உயிரிழந்த போதிலும், மீண்டும் மீண்டுவந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தன.