Page Loader
விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1  உபயோகிக்கிறீர்களா? இனி உங்களுக்கு கூகிள் குரோம் புதுப்பிப்புகள் வராது
கூகிள் கிரோம்

விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 உபயோகிக்கிறீர்களா? இனி உங்களுக்கு கூகிள் குரோம் புதுப்பிப்புகள் வராது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

நாளை முதல், அதாவது ஜனவரி 10 , 2022 முதல், விண்டோஸ் 7 ,8 மற்றும் 8.1 இயங்குதளங்களை கொண்டு இயங்கும் கணினிகளில், கூகிள் கிரோம் அப்டேட்ஸ் வராது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. தற்போது வரும் கணினிகள் பல, விண்டோஸ் 10 /11 பதிப்புகளை கொண்டு வெளிவருகிறது. அதோடு, குரோமின் 109 பதிப்பே, மேலே குறிப்பிட்டுள்ள விண்டோஸ் இயங்குதளத்தை ஆதரிக்கும் கடைசி பதிப்பாகும். வரப்போகும் குரோமின் அடுத்த புதுப்பிப்பு, பழைய விண்டோஸ் இயங்குதளத்தை ஆதரிக்காது. மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இயங்குதள பதிப்புகளுக்கான செக்யூரிட்டி சப்போர்ட்டை நிறுத்தியது. அதன் தொடர்ச்சியாக இப்போது கூகிளும் தனது ஆதரவை நிறுத்துகிறது.

தொடர்ந்து படிக்க

விண்டோஸ் இயங்குதளத்தைப் புதுப்பிக்க:

தற்போதுள்ள கூகிள் கிரோம் பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் 8/8.1 உள்ள கணினிகளில் வேலை செய்தாலும், பின்னாளில், கூகிள் வழங்கவிருக்கும் எந்த ஒரு பாதுகாப்பு மேம்படுத்தல்களும் கிடைக்காது. அதனால், பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், குரோமின் புதிய பதிப்பான 'குரோம் 110' ஐ, வரும் பிப்ரவரி 7, 2023 அன்று வெளியிடுவதாக கூகுள் அறிவித்துள்ளது. எனவே, வரவிருக்கும் 'Chrome 110' பதிப்பை பெற விரும்பினால், உடனடியாக உங்கள் கணினியில் விண்டோஸ் 10 அல்லது அதற்குப் பிறகு உள்ள இயங்குதள பதிப்பை புதுப்பிக்க வேண்டும். அதற்கு, ​​உங்கள் கணினியில், 'Windows Update' சென்று, 'Check for updates' என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் அதை நிறுவவும்.