
கூகுள் பார்ட்டை மீண்டும் சரிசெய்யுங்கள்! ஊழியர்களுக்கு விடுத்த தகவல்
செய்தி முன்னோட்டம்
AI- தொழில்நுட்பம் இணைய உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
chatGPT வருகைக்குப் பின்னர் டெக் உலகில் இது தொடர்பான போட்டி புதிய உச்சத்தை தொட்டிக்கிருகிறது.
அதிலும் குறிப்பாக, கூகுள் இணையத்துக்கு போட்டியாக சாட்ஜிபிடி உருமாறியிருப்பதால், கூகுள் நிறுவனம் தொடக்கத்திலேயே விழித்துக் கொண்டிருக்கிறது.
இதனால், சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு-ஐ உருவாக்கியிருக்கிறது கூகுள் நிறுவனம்.
கூகுள் பார்ட் பல தொடக்கத்தில் இருந்து அதன் பிழைகள் மற்றும் உண்மை பிழைகள் இருப்பதால் பலரும் விமர்ச்சிக்க தொடங்கினார்கள்.
இந்த நிலையில், ChatGPT போட்டியாளரான பார்டின் பதில்களில் பணியாற்றுமாறு கூகுள் தனது ஊழியர்களைக் கேட்டுள்ளது.
கூகுள் பார்ட்
கூகுள் பார்ட்டில் இதையெல்லாம் சரிசெய்யுங்கள்- ஊழியர்களுக்கு துணை தலைவர் பிரபாகர் ராகவன் மின்னஞ்சல்
எனவே, CNBC இன் அறிக்கையின்படி, கூகுளின் தேடல் துணைத் தலைவர் பிரபாகர் ராகவன், Bard-இல் பணிபுரிய உதவுமாறும் அதன் பதில்களை மீண்டும் எழுதுமாறும் கேட்டு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், பார்ட் ஆனது, ஆரம்ப நாட்களில் உள்ளது. அதைச் சரியாகப் பெறுவதற்கு நாங்கள் ஒரு பெரிய பொறுப்பாக உணர்கிறோம்.
மேலும் நீங்கள் Dogfood-இல் பங்கேற்பது மாடலின் பயிற்சியை விரைவுபடுத்தவும் அதன் சுமை திறனை சோதிக்கவும் உதவும்.
ஊழியர்கள் தாங்கள் நன்கு புரிந்துகொள்ளும் தலைப்புகளில் பதில்களை மீண்டும் எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தொழில்நுட்ப நிறுவனமான பார்டுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.