Page Loader
ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
ஜெமினி அளித்திருந்த பதில் தவறாக இருந்தது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தது

ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2024
05:12 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI செய்த தவறுக்காக, கூகுள் நிறுவனம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர், கூகிளின் ஜெமினி AI -இடம், இந்திய பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ஜெமினி அளித்திருந்த பதில் தவறாக இருந்தது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தது. இது வைரலாக பரவிய நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூகிள் நிறுவனத்தை மத்திய அமைச்சகம் கேட்டிருந்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசிடம் கூகிள் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

ஜெமினி AI

ஜெமினியால் வந்த வினை 

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில்,"பிரதமர் மோடி பற்றி ஜெமினி அளித்த ஆதாரமற்ற தகவல்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், தனது இயங்குதள நம்பகத்தன்மையற்றது என்று தெரிவித்தது"என்றார். அதோடு,"செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. "ஒரு வேளை, ஏதேனும் நிறுவனங்கள், இது போன்ற விதிமீறல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பினால், இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், அந்த AI இயங்குதளங்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்" என்று ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்தார்.