Page Loader
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று பிப்ரவரி 06 இல் சற்று குறைந்துள்ளது

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்

எழுதியவர் Siranjeevi
Mar 06, 2023
02:46 pm

செய்தி முன்னோட்டம்

தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், இன்றைய நாள் மார்ச் 06 ஆம் தேதிபடி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.5,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.8 குறைந்து ரூ.42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வளவு?

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 1 குறைந்து இன்று 5612 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுவேம், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 8 ரூபாய் வரை குறைந்து 44,896 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேப்போல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.70.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.70,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.