Page Loader
நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம்
தங்கம் விலையானது மார்ச் 21 இல் இன்று ரூ.80 குறைந்துள்ளது

நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம்

எழுதியவர் Siranjeevi
Mar 21, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,570-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே போவதால் நகை வாங்குவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய நாள் மார்ச் 21 ஆம் தேதிபடி, இன்று தங்கத்தின் விலையில், 24 காரட் ஆபரண தங்கம் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067 எனவும், அதுவே ஒரு சவரன் தங்கம் ரூ. 48,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

தொடர்ந்து, 22 காரட் ஆபரண தங்கம் ரூ.10 குறைவில் 5,570 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 வரை குறைந்து ரூ.44,560 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் கிலோவுக்கு ரூ.100 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ. 74.70 ஆக விற்பனையாகிறது. இதில் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நாட்டின் தலைநகரான டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.59,930 ஆகவும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.55,800 ஆகவும் உள்ளது. அதுவே, மும்பையில் 10 கிராம் 24 காரட் தங்கத்திற்கு ரூ.59,780 மற்றும் 10 கிராம் 22 காரட் தங்கத்திற்கு ரூ.54,800 வசூலிக்கப்படுகிறது.