தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஒரே நாளில் அதிரடி சரிவு
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்நிலையில், நேற்றைய நாளில் ரூ.64 குறைந்த நிலையில், தங்கம் விலை இன்று (பிப்.10) பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.42,560-க்கு விற்பனையாகிறது. அதேப்போல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.5,320-க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டாவது நாளிலும் சரிவு; விலை என்ன?
தங்கம், சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.42,560-க்கு விற்பனையாகிறது. மேலும், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,456-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.72,500-ஆக இருக்கிறது. இரண்டாவது நாள் விலை குறைவு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அடுத்து வரும் கூட்டத்தில் உயர்த்தும் என்ற தகவலால் டாலர் வலுப்பெற்று வருகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து பங்குப்பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தான் தங்கத்தின் தேவை குறைந்து விலை குறையத் தொடங்கியுள்ளது.