தொடர் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை - இன்றைய விலை விவரம்
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. இந்த நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 27ம் தேதிபடி கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 வீழ்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.5,209ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 608ஆகச் சரிந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர் சரிவு - இன்றைய நிலவரம் இங்கே
மேலும், கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,209க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்தவாரம் முழுவதும் குறைந்திருந்தது, இந்த விலைக் குறைவு இந்தவாரத்தின் தொடக்கமான இன்றும் நீடிக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்இருக்கிறது. கடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மேலும் 72 குறைந்துள்ளது நடுத்தர மக்களுக்கும், நகைப் பிரியர்களுக்கும் ஆறுதலாகவும், கூடுதலாக தங்கம் வாங்கும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அதேப்போன்று, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.70.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.69.00 ஆகவும், கிலோ ரூ.70,000 ஆக இருந்தநிலையில் கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.69,000 ஆகவும் வீழ்ச்ச்சி அடைந்துள்ளது.