Page Loader
சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி!
மகனுக்கு விரைவில் திருமணத்தை நடத்தும் கெளதம் அதானி

சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி!

எழுதியவர் Siranjeevi
Mar 14, 2023
07:22 pm

செய்தி முன்னோட்டம்

கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் மற்றும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. கெளதம் அதானியின் இளைய மகனான ஜீத் என்பவர் இன்ஜினியரிங் மற்றும் அப்ளைய்டு சையின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர். இவர், 2019 ஆம் ஆண்டில் இருந்தே அதானி குழும பணியில் சேர்ந்து, தற்போது அதானி குழுமத்தின் நிதி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். மேலும், அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப்ஸ் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு சூப்பர்ஆப் உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி வருகிறார்.

கெளதம் அதானி

மகனின் நிச்சயதார்த்தை நடத்திய கெளதம் அதானி - திருமணம் எப்போது?

இந்நிலையில், ஜீத்-க்கு அதானியின் திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிய முறையில் நடத்தி முடித்திருக்கிறார். அகமதாபாத்தில் நடந்த இந்தத் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அதானி அழைப்பு விடுத்திருந்தார். வைர வியாபாரி மகளான திவாவுக்கும், ஜீத்-க்கும் வெளிநாட்டில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதானி மகன் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் கலந்துகொள்ளக்கூடும் என்று தெரிகிறது. ஹிண்டன்பர்க் ஒற்றை அறிக்கையால் சிக்கிய கெளதம் அதானி குழுமம் மெல்ல மெல்ல கடனை அடைத்து திரும்பி வரும் நேரத்தில் கெளதம் அதானி மகனின் திருமணத்தை அடுத்து பிரம்மாண்டமாக நடத்த திட்டம் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.