Page Loader
அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்
அதானி கடனை வெளியிட மாட்டோம் நிர்மலா சீதாராமன்

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்

எழுதியவர் Siranjeevi
Mar 13, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே, லோக்சபாவில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும், எல்.ஐ.சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு செய்த மொத்த கடன் தொகை 31.12.2022 அன்று 6,347.32 கோடியாக இருந்த நிலையில், 05.03.2023 அன்று 6,182.64 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அதானி குழுமம் கடனை வெளியிடமாட்டோம் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்