பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி
இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதனால், பிக்சட் டெபாசிட்கள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. எனவே, வங்கிகள் இந்த பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக கடன் வாங்கிக் கொள்ள வங்கிகள் சலுகையினை அளிக்கின்றன. இதனால், தனி நபர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடன் தொகையானது வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை பொறுத்து வழங்கப்படுகிறது. இந்த கடனில், இதன் மூலம் தனி நபர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடனில் பிக்சட் டெபாசிட்களின் மதிப்பில் 70 - 90% கொடுக்கப்படலாம். இந்த கடனை எளிதில் பெறலாம். இதன் செயல்பாடுகள் மிகவும் எளிது. இதற்கு எந்த செக்யூரிட்டி ஆவணமும் தேவையில்லை.
பிக்சட் டெபாசிட்டில் கடன் வாங்கும் எளிய வழிமுறைகள் இங்கே...
மேலும், கடனுக்கான கால அவகாசம் என்பது, பொதுவாக குறுகிய காலமாக இருக்கும். இவை 7 நாட்கள் முதல் 5 வருடங்களாக இருக்கலாம். பிக்சட் டெபாசிட்டுக்கு எதிராக வாங்கிய கடனை திரும்ப செலுத்துதலை மாதத் தவணையாக செலுத்திக் கொள்ளலாம். அதேப்போல், எஃப்டிக்கு எதிராக கடன் என்பது சில தினங்களில் கிடைக்கும். இதற்கான ஒப்புதலும் சில நாட்களில் கிடைக்கலாம். பிக்சட் டெபாசிகளுக்கான கடன் என்பது அவசரமாக நிதி தேவைப்படுபவர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும். மற்ற கடன்களை காட்டிலும் வட்டி விகிதம் குறைவு. ஆவணங்களும் குறைவு. இருந்தாலும் தங்கள் நிதி நிலைமையை கவனமாக மதிப்பீடு செய்து, எஃப்டிக்கு எதிராக கடன் பெறுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டும்.