Page Loader
இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக Fire boltt ninja 601 இயர்பட்ஸ் அறிமுகம்!
fire boltt ninja 601 earbuds குறைந்த விலையில் அறிமுகம்

இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக Fire boltt ninja 601 இயர்பட்ஸ் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Jan 14, 2023
01:47 pm

செய்தி முன்னோட்டம்

Fire bolt நிறுவனத்தின் புதிய கேமிங் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஃபயர் போல்ட் ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 ட்ரூ வயர்லெஸ் என இந்த மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. எனவே, 10mm ஃபுல் ரேன்ஜ் டிரைவர்களை கொண்டிருக்கும், ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 அதிக சத்தத்தை வெளிப்படுத்த கூடியது. புதிய அம்சமாக இயர்போனை காதுகளில் வைத்ததும் ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொள்ளும் வசதி உடையது. டைப் சி போர்ட் மற்றும் விரைவாக சார்ஜிங் ஆகும் வசதி உள்ளது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது. கேம் மோடில் சார்ஜ் செய்தாலே 6 மணி நேரம் பிளே-டைமையும் வழங்குகிறது.

அம்சங்கள்

fire boltt ninja 601 அம்சங்கள்

இத்துடன் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த இயர்போன் விசேஷ ANC மற்றும் ENC மோட் கொண்டுள்ளது. கேமிங் துல்லிய அனுபவத்தை பெற இதில் பிரத்யேக கேமிங் மோட் வசதி உள்ளது. அதிலும், 40ms அல்ரா லோ லேடன்சியை வழங்குவது இதன் சிறப்பு அம்சம். விலை மற்று விற்பனைக்கான விவரங்கள் புதிய ஃபயர் பாட்ஸ் நின்ஜா 601 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 899 விலையில் குறுகிய காலக்கட்டத்திற்கு விற்பனை செய்கிறது. இதனை வாங்க ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்போல்ட் வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.